Change the Font size

Friday, December 28, 2012

இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா?

இணையத்தில் 60 செக்கன்களில்
நம் அன்றாட வாழ்வில் இணையம் பின்னிப்பிணைந்துள்ளது. 

உலகம் பூராகவும் இவ்விணையத்தின் ஊடாகப் பல்வேறு கருமங்கள் நடைபெறுகின்றன. 

குறிப்பாக இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா? 

தெரியாதென்றால் இதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 





168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. 

1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய வலைப்பதிவுகள் தொடங்கப்படுகின்றன. 

694,445 தேடல்கள் கூகுளில் தேடப்படுகிறது. 

70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 

695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகின்றன.மற்றும் 510,040 புதிய கமென்ட்கள் பேஸ்புக்கில் பதியப்படுகின்றன. 

98,000 புதிய Tweets ட்விட்டரில் பகிரப்படுகின்றன மற்றும் 320+ புதிய எக்கௌன்ட்கள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. 

யூடியூபில் 600+ புதிய காணொளிகள் பகிரப்படுகின்றன.மற்றும் வாசகர்களால் 25+ மணி நேரம் செலவிடப்படுகிறது. 

1700+ பயர்பொக்ஸ் உலாவிகள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. 

ஸ்கைப்பில் 370,000 நிமிடங்கள் பேசப்படுகின்றன. 

13,000 ஐ போன் அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. 

100+ லிங்க்டின் கணக்குகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

1 comment:

Anonymous said...

oh my god! ivalavu nadakutha....!

Post a Comment