Change the Font size

Monday, January 23, 2012

காது பாதிக்காத அளிவிற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு


மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறிக் கொண்டிருக்கிறது.
இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு,
1. தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.
2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் உபயோகியுங்கள்.
3. நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.
4. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
5. பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.
6. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.
7. கைபேசி மிகக்குறைந்த பற்றரியில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம், முழுமையாக சார்ஜ் செய்து விட்டு பேசுங்கள்.

No comments:

Post a Comment