Change the Font size

Tuesday, January 31, 2012

வீடியோக்களை YouTubeல் துல்லியமாக தேடுவதற்கு!


வீடியோக்களின் பொக்கிசமாக திகழும் மிகப்பிரபல்யமான தளம் YouTube ஆகும். இங்கு காணப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களுக்குள் நாம் எதிர்பார்க்கும் வீடியோவை இலகுவாக பெறுவதற்கு சில வழிமுறைகள் காணப்படுகின்றன.
1. Channel முறையில் தேடுதல்: அதாவது இங்கு தரவேற்றப்பட்டிருக்கும் அனைத்து வீடியோக்களும் வெவ்வேறு வகைகளின் அடிப்டையிலேயே தரவேற்றப்பட்டிருக்கும்.
உதாரணமாக நாடகங்கள், சினிமா, நகைச்சுவை என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே உங்கள் தேடலின்போது பின்வருமாறு பயன்படுத்தவும் Royal wedding, channel
2. (+) குறியை பயன்படுத்தல்: உதைபந்தாட்டத்தில் 2011ம் ஆண்டு போடப்பட்ட மிகச்சிறந்த  கோல்கள் பற்றிய தேடலின்போது football hits+2011 என்றவாறு பயன்படுத்தலாம்.
3. (,) குறியை பயன்படுத்துதல்: உதாரணமாக 3டி வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படின் பின்வருமாறு பயன்படுத்தலாம் - Avatar, 3D
4. இரட்டைத் தொழிற்பாடு: இச்செயற்பாட்டின்போது (+),(,) ஆகிய குறிகள் பயன்படுத்தப்படலாம். உதாரணம்-Mission impossible +2011, HD

No comments:

Post a Comment