Change the Font size

Wednesday, February 1, 2012

விண்வெளியி​ல் தென்பட்ட வேற்றுக்கிர​கவாசிகளின் மர்மப்பொரு​ள்


விண்வெளிக்கு அப்பாற்பட்ட விடயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் முதன் முதலாக வேற்றுக்கிரகவாசிகளின் மர்மமான பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இப்பொருளானது நாசாவின் ஆராய்ச்சியாளர்களால் உடுக்களிடைப்பொருள் என்று அழைக்கப்படுகின்றது. எங்கிருந்தோ உடுத்தொகுதியை நோக்கி அந்த மர்மமான பொருள் வந்துகொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியத்தொகுதியிலிருந்து 322, 000 கிலோ மீட்டர்கள் கொண்ட சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் நடைபெறும் ஆராய்ச்சியிலேயே இந்த பொருள் தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரியமண்டலத்திற்கு அப்பாலும், நட்சத்திரங்கள் பற்றி ஆராயவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் 2008ம் ஆண்டு 169 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட Interstellar Boundary Explorer(IBEX) என்ற திட்டத்தின் மூலமே இம்மர்மப்பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment