Change the Font size

Monday, February 13, 2012

வானில் ஒ​ரே இரவில் காணப்பட இரு​க்கும் ஐந்து கோள்கள்

வானிலுள்ள கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் ஒழுக்கில் ஒன்றிலிருந்த ஒன்று மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் அவதானிக்க முடிவதில்லை.
இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் ஐந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை மையத்தின் இயக்குனர் அரவிந் பரன்ஜ்பே தெரிவித்துள்ளார்.
புதன், வௌ்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கோள்களே இவ்வாறு ஒரே இரவில் தோற்றமளிக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்நிகழ்வானது அனேகமாக பெப்ரவரி 22 தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுள் வௌ்ளி கிரகத்தை வெற்றுக்கண்ணின் ஊடாக நாள் தோறும் இரவு ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரையும், சனி செவ்வாய் ஆகிய கோள்களை பார்வை உபகரணங்களை பயன்படுத்தாது சூரியன் உதித்து மறையும் காலப்பகுதியில் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment