வாகனங்களை அறிமுகப்படுத்தும் போது பொதுவாக தரைவழி, நீர்வழி, வான்வழி என்று பிரித்துத்தான் அறிமுகப்படுத்துவார்கள். இருந்தும் ஆகாயத்திலும், நீரிலும் செல்லக்கூடிய சீ பிளேன்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
தற்பொழுது அவற்றையெல்லாம் தாண்டி தரையிலும் நீரிலும் பாய்ந்து செல்லக்கூடிய புதிய வகை ட்ராக் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுளது. ஈரூடகத்திலும் பயணம் செய்யும் ஆற்றலை கொண்டுள்ளதால் அதற்கு Amphitrucks என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இவை நீரில் மணிக்கு 48 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணம் செய்யக்கூடியன. சாதாரணமாக 12 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செல்லக்கூடிய இந்த ட்ராக்குகளின் நிறை 1,500 கிலேகிராம்கள் ஆகும். இவற்றின் விசேட அம்சம் என்னவென்றால் நான்கு சில்லுகளும் நேரடியாக இன்ஜினுடன் தொடர்புடையவை என்பதாகும்.




No comments:
Post a Comment