
இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக சுவிஸில் உள்ள பெயார்பூட் நிறுவனம் விசித்திரமான ஒரு காலணியை உருவாக்கியுள்ளது. அதாவது சொக்ஸ் போன்று மட்டுமே காணப்படும் இந்த காலணிக்கு மேலே சப்பாத்து அணிய தேவையில்லை. மாறாக இக்காலணியே சொக்ஸ், சப்பாத்தாக செயல்படக்கூடியது.
மேலும் இதை அணிந்துகொண்டு இலகுவாக நடக்கவும், ஓடவும், விளையாட்டுக்களில் ஈடுபடவும் முடியும். இக்காலணியின் 50 சதவீதம் கெவ்லர் என்ற பதார்த்தத்தினாலும், 32 சதவீதம் பொலியெஸ்டராலும், 10 சதவீதம் பருத்தியாலும், 8 சதவீதம் ஸ்பான்டக்ஸ் ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த காலணியின் விலை இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது நீண்ட காலணி 78 அமெரிக்க டொலர்கள் எனவும், கட்டையானது 73 அமெரிக்க டொலர்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment