Change the Font size

Saturday, March 3, 2012

காகித விமானத்தினை அதிக தூரம் பறக்க வைத்து உலகசாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் ஒருவர் காகிதத்தினால் செய்த விமானத்தை 226 அடி தூரம் பறக்கவிட்டு புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

ஜோ அயூப் என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் விடப்பட்ட காகித விமானமானது 226 அடி 10 அங்குல தூரத்தை கடந்துள்ளது. இவர் இதற்கு முன்பு இருந்த 20 அடி என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
ஜோன் கொலின் என்வரினால் வடிவமைக்கப்பட்ட இக்காகித விமானமானது ஏ4 காகிதத்தினால் வடிவமைக்கப்பட்டு சிறிய டேப்பினால் ஒட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அயூப் தெரிவிக்கையில், சிறுவயது முதலே எனக்கு இதில் ஆர்வம் அதிகம். நான் சிறியவனாக இருக்கும் போது பாடசாலையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் காகித விமானம் செய்து எறிவது வழமை.

இது எனக்கான ஒரு வழியாக காணப்பட்ட இதனை, சிலர் இதில் என்ன இருக்கின்றது என நினைப்பார்கள். இது சாதாரண காகித விமானமாக தோன்றினாலும், உலக சாதனையை நிலைநாட்டிவிட்டது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment