
- போட்டோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
- தலைகீழாக உள்ள போட்டோக்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
- படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்ற Exposure வசதி
- போட்டோக்களின் அளவை குறைக்க Resize வசதி.
- 20 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு வகையான எப்பெக்ட்களை கொடுத்து கொள்ளலாம்.
- உங்கள் போட்டோக்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.
- போட்டோவில் உங்களுக்கு விருப்பமான எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.
வழிமுறை:
- முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
- Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
- அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும் உங்கள் இணைய வேகத்தை பொருத்து திறக்க சில நிமிடங்கள் எடுத்து கொள்ளும் காத்திருக்கவும்.
- அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும் அதில் உங்கள் போட்டோக்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம்.

கூகுளுக்கும் பேஸ்புக்கிற்கும் இடையே நடக்கும் போட்டியில் வாசகர்களாகிய நமக்கு சில பயனுள்ள வசதிகள் கிடைத்தால் நலமே.
Thanks- How to add special effects to your photos in Google plus [Picnik into Plus]
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment