Change the Font size

Tuesday, March 13, 2012

சுவாசத்தின் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலா

மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது முகத்தில் அணியக்கூடியதும், நாம் சுவாசிக்கும் போது அந்த சுவாசத்தை மின்சக்கதியாக மாற்றுவதுமான உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாம் விழித்திருக்கும் போதும், தூங்கும் போதும் கைப்பேசியைச் சார்ச் செய்ய முடியும் என்பது விஷேட அம்சமாகும்.
பிரேசிலைச் சேர்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த உபகரணமானது கடுமையான வேலைகளை செய்யும் போது அதிகளவு மின்சக்தியை வெளிவிடவல்லது.
அத்துடன் வாரத்தில் ஏழுநாட்களும் 24 மணி நேரமும் இதனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 15ம் திகதியிலிருந்து சந்தைக்கு வரும் இந்த உபகரணம் 60 தொடக்கம் 70 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment