Change the Font size

Wednesday, March 14, 2012

Youtube வீடியோ பிளேயரில் புதிய பயனுள்ள வசதிகள்

இணையத்தில் வீடியோக்களின் சுரங்கம் யூடியுப் என்றால் மிகை அல்ல. வீடியோக்கள் பகிர பல தளங்கள் இருந்தாலும் அனைவரின் விருப்பத்திற்கு உரியது யூடியுப் தான். கடந்த வருட கணக்கெடுப்பின் படி ஒவ்வொரு நாளும் சுமார் 3 Billion வீடியோக்கள் youtube தளத்தில் பார்க்க படுகிறதாம். உலகம் முழுவதிலும் இருந்து 148 மில்லியன் வாசகர்களை கொண்டுள்ள ஒரே வீடியோ பகிரும் தளம் Youtube தான். இப்படி இதனுடைய சாதனையை சொல்லி கொண்டே போகலாம். அனைவரும் youtube தளத்தை விரும்ப காரணம் இதிலுள்ள வசதிகளும், வீடியோக்களின் தரமும் தான் காரணம். Youtube தற்பொழுது ஒரு புதிய பயனுள்ள வசதியை அறிமுகபடுத்தி உள்ளது.
youtube தளத்தில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் வீடியோவில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் பார்க்க வேண்டுமென்றால் அந்த வீடியோவின் Play Bar மீது உங்கள் கர்சரை வைத்தால் அடுத்து என்ன வருகிறது என்பது ஒரு சிறிய கட்டத்தில் தோன்றும். இப்படி உங்கள் மவுஸ் கர்சரை முன்னும் பின்னும் நகர்த்தி குறிப்பிட்ட பகுதியை மட்டும் சுலபமாக பார்த்து கொள்ளலாம்.

மற்றும் ஓடி கொண்டிருக்கும் வீடியோவில் உள்ள வெண்மை நிற பட்டனை அழுத்தி இழுத்தால் அடுத்த பகுதிகள் கட்டம் கட்டமாக தெரிவதை காணலாம்.


இந்த முறையிலும் சரியான பகுதிக்கு சென்று வேண்டியதை மட்டும் பார்த்து கொள்ளலாம்.

HTML5 சப்போர்ட் செய்யும் இணைய உலவிகளில் மட்டும் தான் இந்த புதிய வசதிகள் வேலை செய்யும். ஆகவே உங்கள் இணைய உலவியின் புதிய வெர்சனை டவுன்லோட் செய்ய இங்குசெல்லுங்கள்.

கீழே உள்ள வீடியோவை பார்த்து புதிய வசதிகளை சோதித்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment