

1869 இல் ரஷ்சிய விஞ்ஞானி Dmitri Mendeleev அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்து வரும் ஆவர்த்தன அட்டவணையில் இன்று கிட்டத்தட்ட 117 தொடக்கம் 118 வரையான மூலகங்கள் அவற்றின் இரசாயன இயல்புகளின் அடிப்படையில் அட்டவணையிடப்பட்டுள்ளன.
இந்த ஆவர்த்தன அட்டவணையில் மிகக் குறுகிய அரை வாழ்வுக்காலம் ( Half life) கொண்ட ஒரு அதி பார (super-heavy) மூலகம் தற்போது சேர்க்கப்பட உள்ளது.
International Union of Pure and Applied Chemistry (IUPAC) அமைப்பினரால் ununbium (அன்னன்பியம்)(Uub) என்று தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த மூலகம் 112 எனும் அணு எண்ணைக் கொண்டது.
ஜேர்மனிய மற்றும் வேறு சில நாட்டு ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியுடன் ஏற்றம் கொண்ட நாக (Zn) அயன் நிலை அணுக்கள் கற்றையாக ஈய (Pb) அணுக்களுடன் 120 மீற்றர்கள் நீளமுள்ள ஆர்முடுக்கி மொத்துகைக் குழாயில் மோதவிடப்பட்டு கரு நிலை இயைபின் பின்னான உறுதியற்ற ஒருங்கு நிலை அணுவாக இந்த மூலகமும் வேறு சில அணுக்களுக்கிடையேயான மொத்துகை மூலம் வேறு சில புதிய மூலகங்களும் (அணு எண் 118 கொண்ட மூலகம் உட்பட) உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புக்களின் நீட்சி ஆவர்த்தன அட்டவணையில் 120 மூலகங்களை இடும் வரை தொடரலாம் என்றும் தெரிகிறது.
மேலதிக தகவல் இங்கு.
No comments:
Post a Comment